எரிச்சல் எரிச்சலா வருதாங்க...? இது கூட காரணமாக இருக்கலாம்!

கொரோனா வந்ததால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குறித்த சிந்தனைகள் பலருக்குள் எழுந்துள்ளது. நாம் சாதாரணமாக நினைக்கும் சில நிகழ்வுகள் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்துள்ளதன் அறிகுறிகள் என்று உடல் நல ஆலோசகர்கள் கூறுகின்றனர். பொதுவாக இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றலும் குறையும். ஒரு நபருக்கு ஓர் ஆண்டில் ஐந்துக்கும் மேற்பட்ட முறை காதுகளில் தொற்று, தீவிர சைனஸ் பிரச்சனை, இரண்டு முறை நிமோனியா தாக்கக்கூடும் அல்லது ஓராண்டு மூன்று முறை நோய் எதிர்ப்பு மருந்து சாப்பிடக்கூடிய நிலை ஏற்படும் என்று பொதுவாகக் கூறப்படுகிறது.

அதிகமான மன அழுத்தம்

"மனசே சரியில்லைங்க," என்று எளிதாக நாம் கூறுகிறோம். ஆனால், அதிகப்படியான மன அழுத்தத்தை நாம் உணர்ந்தால், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். மன அழுத்தத்தைக் கவனிக்காமல் அலட்சியமாக இருந்தால் நாளடைவில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிக பாதிப்புக்குள்ளாகும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அசதி

இரவு நன்றாக உறங்கி காலையில் எழுந்தாலும் நாள் முழுவதும் மந்தமாகவே சிலர் இருப்பர். அதற்குக் காரணமும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதுதான் என்பது தெரியுமா? நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருப்பதால் உடல் பலவீனமடைந்து சோர்ந்துபோகிறது; கவனத்துடன் செய்யவேண்டிய பணிகளைச் செய்ய முடியாமல் போகும்.

குணமடையாத காயம்

ஏதாவது காயம் ஏற்பட்டால், அது விரைவில் குணமடையாமல் இருக்கிறதா? காயத்தை மூடுவதற்கு புதியதாகத் தோல் வளரவில்லையா? அதுவும்கூட நோய் எதிர்ப்பு ஆற்றலில் ஏற்பட்டுள்ள குறைபாட்டின் அறிகுறியாகும். நோய் எதிர்ப்பு செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சேதமடையும் தோலை விரைவிலேயே புதிதாக உருவாக்கும்.

மூட்டு வலி

அடிக்கடி மூட்டு வலி ஏற்படுகிறதா? உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றல் நெடுங்காலம் குறைவாக இருந்தால் மூட்டுவலி என்னும் அறிகுறி ஏற்படலாம். முகம் வீங்குதல், அழற்சி காரணமாக மூட்டில் வலி ஏற்படுதல் ஆகியவையும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவின் வெளிப்பாடுகளே என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அவற்றை அலட்சியம் செய்யவேண்டாம். சரியான ஆரோக்கிய உணவுகளைச் சாப்பிடுவதுடன், தொடர்ந்து ஒழுங்காக உடற்பயிற்சி செய்து வந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் மேம்படும்.

You'r reading எரிச்சல் எரிச்சலா வருதாங்க...? இது கூட காரணமாக இருக்கலாம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கங்குலி உடல்நிலையில் திருப்தி மருத்துவமனை தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்