சுகர் இருக்குதா? டீ குடிக்கக் கூடாதா? இந்த டீயை குடிக்கலாம்!

பொதுவாக டயாபடீஸ் என்று அறியப்படும் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான அளவு இன்சுலின் சுரக்காததினால் வரும் இரண்டாம் வகை நீரிழிவே இருக்கக்கூடும். நீரிழிவு இருப்பவர்கள் தேநீர் போன்ற பானங்களை அருந்துவதை தவிர்ப்பர். அதில் சர்க்கரை சேர்க்கவேண்டியதிருப்பதால் சுகர் இருப்பவர்கள் டீ அருந்துவதில்லை. அதேபோன்று இரத்தக்கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களும் டீ அருந்தமுடியாது.

வெள்ளைப்பூண்டு டீ
வெள்ளைப் பூண்டுக்கு பல மருத்துவகுணங்கள் உள்ளன. சிலர் வெள்ளைப்பூண்டை மென்று தின்று வெதுவெதுப்பான நீர் அருந்துவார்கள். அப்படி செய்ய முடியாதவர்கள், தேன், வெள்ளைப்பூண்டு, எலுமிச்சை மற்றும் நீர் கலந்து வெள்ளைப் பூண்டு தயாரித்து அருந்தலாம். இஞ்சி மற்றும் இலவங்கபட்டை சேர்த்தாலும் சுவை அதிகரிக்கும். வெள்ளைப்பூண்டு டீயில் காஃபைன் கிடையாது. வெள்ளைப்பூண்டுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் குணம் உண்டு. வெள்ளைப் பூண்டு டீ, வளர்சிதை (மெட்டபாலிசம்) மாற்றத்தை தூண்டும். உடல் ஆற்றலை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கும்.

நீரிழிவுக்கு ஏன் நல்லது?
நீரிழிவு பாதிப்பை அதிகரிக்கக்கூடிய அமினோ அமிலம் ஹோமோசிஸ்டைன் ஆகும். வெள்ளைப் பூண்டு டீ இந்த அமினோ அமிலத்தின் அளவை குறைக்கிறது. வெள்ளைப் பூண்டு டீ, நோய்கிருமிகளுக்கு எதிராக செயல்படக்கூடியது. ஆகவே, இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நீரிழிவு பாதிப்பு, உடலில் அழற்சியை ஏற்படுத்துகிறது. வெள்ளைப்பூண்டு இந்த அழற்சி பாதிப்பை குறைக்கிறது. இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்பு கொண்டோர். வெள்ளைப் பூண்டு டீ அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. வெள்ளைப்பூண்டு டீ, கொலஸ்ட்ராலை குறைக்கிறது. நீரிழிவுடன் தொடர்புடைய ஏனைய பாதிப்புகளை தடுக்கிறது. வெள்ளைப்பூண்டிலுள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, உறுப்புகளை நன்றாக செயல்பட வைக்கிறது. உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சாதாரண தேநீருக்கு மாற்றாக திகழ்கிறது. இரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதின் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

You'r reading சுகர் இருக்குதா? டீ குடிக்கக் கூடாதா? இந்த டீயை குடிக்கலாம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வாழைப்பழம் சாப்பிடுவது எடையை அதிகரிக்குமா? உண்மை எது தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்