இரவில் படுக்கும் முன்பு இதை தின்று வெந்நீர் குடித்து பாருங்கள்

கை, கால் மற்றும் பாதங்கள் நடுங்கும் பிரச்னை முதுமையினால் வரலாம். நடுக்கு வாதம் என்று அழைக்கப்படும் பார்கின்சன் பாதிப்பை குறைக்கக்கூடிய உணவு பொருள் நம் அனைவர் வீட்டிலும் இருக்கிறது. தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு இரண்டு கிராம்பை தின்று சிறிதளவு வெந்நீர் குடித்து வந்தால் கை, கால் நடுக்கம் குறையும்.

கிராம்புவின் அறிவியல் பெயர் சிஸ்ஸிகியம் அமோடிகம் (Syzygium aomaticum) ஆகும். இது மருத்துவ குணங்கள் கொண்டது. வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் இ, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், தையமின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்களும், அழற்சி மற்றும் பாக்டீரியாக்களை தடுக்கும் இயல்புகளும் கிராம்பில் உள்ளன.

கிராம்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வயிற்றுக் கோளாறுகள் மற்றும் பல், தொண்டை வலிகளை போக்கும். மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, அமிலத்தன்மை (அசிடிட்டி) ஆகியவற்றை குணமாக்குவதோடு செரிமானத்தையும் அதிகரிக்கும்.

பல்லில் வலி இருக்குமிடத்தில் கிராம்பை வைத்தால் வலி மரக்கும். கிராம்பை வெந்நீருடன் உள்ளுக்குள் எடுத்துக்கொண்டாலும் பல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். கிராம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இருமல், சளி, வைரஸ் தொற்று, சைனஸ் மற்றும் ஆஸ்துமா தொல்லைகளிலிருந்து விடுபடவும் கிராம்பு உதவும்.

You'r reading இரவில் படுக்கும் முன்பு இதை தின்று வெந்நீர் குடித்து பாருங்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - செங்கல்பட்டில் கோவாக்சின் தடுப்பூசி ஆலை?.. மத்திய அரசு பிளான்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்