சுகர் ஃப்ரீ சர்க்கரையா? உடல்நலன் கேள்விக்குறிதான்!

செயற்கை இனிப்பூட்டிகளால் உடல்நலனுக்கு அளவுக்கதிகமான தீங்கு விளையும் என அமெரிக்க அறிவியல் ஆய்வு ஒன்று எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

செயற்கை சுவையூட்டிகள் 'சுகர் ஃப்ரீ' என விளம்பரப்படுத்துவதால் மட்டும் உடல்நலனுக்கு ஆரோக்கியம் தருவது என அடையாளப்படுத்த முடியாது. சர்க்கரை பயன்பாட்டை விட செயற்கை சுவையூட்டிகள் மூலம் உணவுப்பண்டங்களில் கொடுக்கப்படும் இனிப்புச்சுவை உடல்நலனைக் கேள்விக்குறியாக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.

அதாவது 'சுகர் ஃப்ரீ' இனிப்புகள், உணவு வகைகள் என சாப்பிடுவதன் மூலம் நாம் நமது அன்றாட உணவில் சர்க்கரையைவிட்டு விலகிருப்பதாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால், இதுபோன்ற செயற்கை சுவையூட்டிகளால்தான் உடல்நலன் கெடுகிறது.

உடல் பருமன், சர்க்கரை வியாதி, இருதய பாதிப்புகள், ஏன், கேன்சர் போன்ற கொடிய நோய்கள் செயற்கை சுவையூட்டிகளால் ஏற்படும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று சர்வதேச மக்களுக்கு எச்சரிக்கை மணியடித்துள்ளது.

உடல்நலனைக் காக்க வேண்டி நாமே நமக்கு விஷத்தை மருந்தாக எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

You'r reading சுகர் ஃப்ரீ சர்க்கரையா? உடல்நலன் கேள்விக்குறிதான்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓவருக்கு 7 பந்து - நடுவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட ஐபிஎல் தலைவர் எச்சரிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்