மருந்து மாத்திரைகளையும் தாண்டி...புற்றுநோய்க்கான சிகிச்சை மாறுபட்டது

மருந்து, மாத்திரைகளான சிகிச்சைகள் மட்டுமின்றி புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் மாறுபட்டதாக உள்ளன. புற்றுநோய்க்கான சிகிச்சை ஒரு முழுமையானதாக இருக்க வேண்டும். யோகா, மூச்சுப்பயிற்சி என செய்வதிலிருந்து மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான பயிற்சிகள் வரையில் புற்றுநோய்க்கான சிகிச்சை முறை என்பது முற்றிலும் வேறு.

நோய் என்று ஒன்று வந்தாலே அதுகுறித்த பயமும் எதிர்மறை எண்ணங்களும் நம் மனதுக்குள் ஊடுருவுவது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால், இது நம் மன அமைதியையும் நலனையும் முற்றிலும் கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய நவீன உலகின் நம் உடல்நலன் மீது அக்கறை கொள்வதைக் கூட பெரும் சுமையாக நினைக்கிறோம். சரியான உணவு, நல்ல குடிநீர், போதுமான உடல் உழைப்பு என எதுவும் இல்லாமல் நம் உடலை நாமே கெடுத்துக் கொள்கிறோம். கூடுதலாக, மனக்குழப்பம், மன அழுத்தம் என மனதைக் கெடுக்கும் காரியங்களில் எல்லாம் ஈடுபட்டு உடலைக் கூடுதலாகக் கெடுத்துக்கொள்கிறோம்.

இதுவரையில் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகளில் மனநலன் தொடர்பான பிரச்னைகளாலே புற்றுநோய் தாக்குதல் ஏற்படவும் அதன் விளைவுகள் அதிகரிக்கவும் செய்கிறதாம். அதனால், கீமோதெரபி, ரேடியோதெரபி ஆகியவற்றுடன் சேர்த்து யோகா, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை செய்து மனநலனை மேம்படுத்தியும் நல்ல உணவுப் பழக்கங்களைக் கடைபிடித்து உடல்நலனையும் சீர் செய்தல் வேண்டும்.

இதுபோல் பல்நோக்கு கவனமும் அக்கறையும் சிகிச்சையும்தான் புற்றுநோய்க்கான சரியான சிகிச்சையாக இருக்க முடியுமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.

You'r reading மருந்து மாத்திரைகளையும் தாண்டி...புற்றுநோய்க்கான சிகிச்சை மாறுபட்டது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெயில் கால சருமப் பிரச்னையை சமாளிக்க 7 டிப்ஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்