உடல் எடை பிரச்னையா? ஜிம் எல்லாம் வேண்டாம்..!

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என ஜிம், ஜூம்பா எனக் காசு செலவழிப்பதை விட வீட்டிலேயே சில பயிற்சி முறைகளைப் பின்பற்றலாம்.

ஒரு ஜிம்மில் சேர்ந்தால் மட்டும், எடையைக் குறைத்துவிடலாம் என்று நினைத்து விடக் கூடாது. சில அடிப்படை மாறுதல்களை எடை குறைப்புப் பயிற்சியுடன் சேர்த்துக் கொண்டால், எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். இல்லையென்றால், எடை குறைப்புப் பயணம் என்பது மிகக் கடினமாக அமைந்துவிடும்.

வெகு நேரம் உட்கார்ந்து இருந்தால், ஒரு இரண்டு நிமிடம் உங்கள் நாற்காலியைவிட்டு இறங்கி வீட்டுக்குள்ளேயே ஒரு சின்ன நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். வீடு முதல் மாடியிலிருந்தால் கூட லிஃப்ட் பயன்படுத்தாமல் மாடி படியேறி செல்லுங்கள். இதற்காக தனியாக நடைபயிற்சி கூட ஸ்பெஷலாக செய்ய வேண்டாம்.

கட்டுப்பாடுகள் இல்லாமல் ஐந்து நிமிடம் நடப்பதற்குப் பதில் அதை ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடம் அதிகரித்துக்கொள்ளலாம். இதனால் கண்டிப்பாக உங்கள் ஸ்டாமினா அதிகரிக்கும். வீட்டுக்கு வெளியே கிடைக்கும் அத்தனை உணவுப்பொருள்களையும் உங்கள் வயிற்றில் சேமிக்காமல் தவிர்த்தாலே பல பிரச்னைகளுக்கும் குட் பை சொல்லிவிடலாம்.

You'r reading உடல் எடை பிரச்னையா? ஜிம் எல்லாம் வேண்டாம்..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் லீக் போட்டி #MTBC

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்