அழகுசாதனப் பொருள்களால் புற்றுநோய் கூட ஏற்படலாம்!

அனல் கொதிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் பயன்படுத்தும் அல்லது பயன்படுத்திக் கொண்டிருக்கும் அழகுசாதனப் பொருள்களால் சில நேரம் புற்றுநோய் தாக்குவதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளது என மருத்துவ ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன.

காலாவதியான அழகுசாதன க்ரீம்கள், சன்ஸ்கிரீன் லோஷன், மாய்ஸ்டரைஸர் போன்ற க்ரீம்களை நாம் பயன்படுத்தும் போது அது தோல் புற்றுநோயைத் தந்துவிடுகிறது. இதுபோன்ற காஸ்மெட்டிக் கிரீம்களைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் இதுபோன்ற அழகுசாதன க்ரீம்கள் தோலுக்கு இன்னல் தரும் உட்பொருள்களால் தயாரிக்கப்படுகிறதாம். அழகுசாதனப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மக்களுக்குக் கேடு விளைவிக்காதப் பொருள்களைத் தயாரித்து வழங்கினாலே பல தோல் தொடர்பான வியாதிகளில் இருந்து மீளலாம் என அமெரிக்க மருத்துவ சங்கம் சமீபத்தில் ஒரு அறிவுரையை பெரு நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது.

மேலும், சன் ஸ்கிரீன் லோஷன் போட்டுக்கொண்டு மக்கள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என ஹவாய் தீவு சமீபத்தில் ஒரு உத்தரவையே பிறப்பித்திருக்கிறது. இது தன் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல சுற்றுலா பயணிகளுக்கும் கேடு என அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக இயற்கை வளங்களான கடல் பவளப் பாறைகள் மோசமான கிரீம்களால் அழிவைச் சந்திக்கிறதாம்!

You'r reading அழகுசாதனப் பொருள்களால் புற்றுநோய் கூட ஏற்படலாம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெள்ளப் பெருக்கில் சிக்கியது அமெரிக்காவின் எலிகாட் சிட்டி !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்