கல்லீரல் நலம் காப்பது அவசியம்!

ஒரு மனிதனின் கல்லீரலுக்கு உள்ள வேலைப்பளு அதிகம்.

நம் உடலில் உள்ள ரத்தத்தில் சேரும் இறந்த அணுக்களை வடிகட்டி நீக்கி, கேடு விளைவிக்கும் ஹார்மோன்களிடமிருந்து உடலைக் காப்பாற்றுவது நம் கல்லீரல் தான். அதனால், ஒரு மனிதனின் ஆரோக்கியத்துக்கு கல்லீரலின் சேவை மிகவும் அவசியம்.

ஆனால், ஒரு கட்டத்தில் நம் கல்லீரல் தனது வேலையை சொதப்பினால், அது உடலின் பலத்தையே சீர்குழைப்பது போன்றதாகிவிடும். அளவுக்கு அதிகமாக வியர்த்து உடல் அதிகமாக துர்நாற்றம் அடித்தால் உங்கள் கல்லீரலைக் கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும், ஆழ்ந்த உறக்கம் இல்லையெனில் கல்லீரல் தான் முதலில் பாதிக்கப்படும். மஞ்சள் நிறமாக நாக்கு மாறியிருத்தல், வாய் துர்நாற்றம் ஆகியவையும் நம் கல்லீரல் பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் ஆகும்.

அறிகுறிகளை வைத்து கல்லீரலுக்கான தேவையை அளித்து நல்ல உனவுமுறையைப் பின்பற்றி வாழ்ந்தால் நலமுடன் வாழலாம் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாக உள்ளது.

You'r reading கல்லீரல் நலம் காப்பது அவசியம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காலா டிரைலர் வெளியான ஒரே நாளில் 3.1 மில்லியன் வியூவ்ஸ்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்