இவையெல்லாம் வேண்டாம்- கர்ப்பிணிப்பெண்கள் கவனத்துக்கு!

உணவுகள் பல ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால், கர்ப்ப காலத்தில் அதிலும் சிலவற்றைத் தவிர்க்க வேண்டியது கட்டாயமாகிறது. ஏனெனில், அவை சில நேரம் தாயையும், சில நேரம் கருவையையும் பாதிக்கக்கூடும்.

அவை:

1.மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். கருவுற்றிருக்கும் தாய் மது அருந்தினால் அது குறைப்பிரசவம், குறைபாடுகளுடன் குழந்தை, பிறப்புச் சிதைவு மற்றும் உடல் எடைக் குறைவான குழந்தை எனப் பல வகைகளிலும் வயிற்றில் வளரும் சிசுவை பாதிக்கும்.

2.முதல் மூன்று மாதங்களுக்கு காபி, டீ உள்ளிட்ட பானங்களைத் தவிர்த்தல் நல்லது.

3.செய்ற்கை இனிப்பூட்டிகள் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

4.கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். குறிப்பாக, ஒரு நபர் ஒரு நாளைக்கு 2ஆயிரம் கலோரிகள் நிறைந்த உணவை எடுத்துக்கொண்டால் சரியாக 65கிராம் அளவிலான கொழுப்பை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.

5.இதேபொல் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகள் நாள் ஒன்றுக்கு 300 மில்லி கிராம் அல்லது அதுக்கும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

6.பாதரசச்சத்து நிறைந்த மீன் உணவுகளை சாப்பிடக்கூடாது. கருவுற்றிருக்கும் போது பாதரசம் நிறைந்த உணவு சாப்பிட்டால் அது குழந்தைக்கு மூளைச்சிதைவை ஏற்படுத்தும். குறிப்பாக மீன் உணவை பச்சையாக உண்ணக்கூடாது.

7.சமைக்காத கடல் உணவுகள், கோழி உணவு வகைகள் முற்றிலுமாக கருவுற்றிருக்கும் காலத்தில் தவிர்க்க வேண்டும். 

You'r reading இவையெல்லாம் வேண்டாம்- கர்ப்பிணிப்பெண்கள் கவனத்துக்கு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கல்லீரல் நலம் காப்பது அவசியம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்