உறக்கம் இன்றி தவிக்கச் செய்யும் ஸ்மார்ட் ஃபோன்... கவனம்!

உறக்கத்தைப் பாதிக்கும் ஸ்மார்ட் ஃபோன்

நம் உடல் ஒரு சுழற்சியை கைக்கொள்ளுகிறது. அதன்படி பகலில் விழித்திருக்கிறோம். இரவில் தூங்கி ஓய்வெடுக்கிறோம்.

உடல், தான் கடைப்பிடிக்கும் கடிகாரத்தின்படி, இந்த பகல், இரவு நடக்கைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுகிறது. இரவு வரும்போது, நம் மூளை மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. அதுவே உறக்கத்திற்கான ஹார்மோன். நமக்கு தாலாட்டு பாடி உறங்க வைப்பதுதான் மெலடோனின்.

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன், டேப்லெட், லேப்டாப் ஆகியவை அதிக வெளிச்சத்தை உமிழக்கூடியவை. அவற்றின் திரைகள் அதிகமாக ஒளிரக்கூடியவை. இரவில் அவற்றை பார்ப்பது, சூரியஒளி ஒரு குட்டி ஜன்னலின் வழியாக வந்தால் எவ்வளவு பிரகாசமாக இருக்குமோ அதுபோன்ற உணர்வை அளிக்கும்.

இரவில் பிரகாசமான வெளிச்சத்தை கண் பார்ப்பதால், மெலடோனினை சுரப்பதா வேண்டாமா? இது பகலா அல்லது இரவா என்ற குழப்பம் மூளைக்கு உருவாகி, ஹார்மோன் உற்பத்தியில் தடுமாற்றம் உண்டாகிறது.

இரவில் ஸ்மார்ட் ஃபோனை பார்ப்பது நம் உறக்கத்தை எப்படி கெடுக்கிறது?

அதிக நேரம் ஸ்மார்ட் ஃபோனை பார்த்துக்கொண்டிருப்பதால், நாம் கண்ணிமைக்கும் நேரம் குறைகிறது. அது கண்ணின் வேலைப்பளுவை அதிகரித்து, கண்ணை உலர்ந்து போகச் செய்கிறது. கண் எரிச்சல் உண்டாகிறது; கண்ணை மங்க செய்கிறது.

இரவில் உறக்கம் கெடுவதால், மறுநாள் ஞாபகசக்தியில் பாதிப்பு காணப்படலாம். மெலடோனின் ஹார்மோன் உற்பத்தி மற்றும் உறக்கத்தில் பாதிப்பை உருவாக்கும் ஸ்மார்ட் ஃபோன், பசியை உருவாக்கும் ஹார்மோனின் உற்பத்தியையும் பாதிக்கிறது. இதன்காரணமாக உடல் பருமன் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளது.

போதுமான உறக்கம் இல்லாமல் இருப்பது நாளடைவில் நியூரோடாக்ஸின் என்னும் நரம்புநச்சினை உருவாக்கி, நல்ல தூக்கம் என்பதே இல்லாமல் தடுத்து விடும். ஸ்மார்ட் ஃபோன் உங்கள் உறக்கத்தை கெடுக்க கெடுக்க படிப்பதும் சிரமமாகி விடும்.

இரவில் பிரகாசமான ஒளி காரணமாக தூக்கம் கெடுவது, புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் வர காரணமாகும். ஸ்மார்ட் ஃபோனின் ஒளி காரணமாக, மெலடோனின் குறைபாடு உண்டாகி, தூக்கம் இழப்பவர்களுக்கு, உடலின் இயக்க கடிகாரத்தை புறக்கணிப்பவர்களுக்கு மனச்சோர்வு உருவாகும் வாய்ப்பு அதிகம்.

ஸ்மார்ட் ஃபோனை அருகில் வைத்துக்கொண்டு, வேறு ஏதாவது வேலையில் கவனமாக ஈடுபட முயன்றீர்கள் என்றால், அந்த வேலையில் முழு கவனத்தையும் செலுத்தாதவண்ணம் ஸ்மார்ட் ஃபோன் கவனசிதறலை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

எஃப்.எல்யூஎக்ஸ் போன்ற செயலி ஃப்ரோகிராம்கள், ஆப்பிளின் நைட் மோட் போன்ற தெரிவுகள் ஸ்மார்ட் ஃபோனின் ஒளியைக் குறைக்கக்கூடும். ஆனாலும், ஸ்மார்ட் ஃபோனை கட்டிலில் ஏற்றாமல் இருப்பது, நன்றாக உறங்கம் வருவதற்கான உத்திரவாதத்தை தரும்.

You'r reading உறக்கம் இன்றி தவிக்கச் செய்யும் ஸ்மார்ட் ஃபோன்... கவனம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கலிபோர்னியாவின் காட்டுத் தீ

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்