ஆண்கள் வேடத்தில் சபரிமலை சென்ற இளம்பெண்கள் - தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள்!

Women in Sabarimala role of men protesters stopped them

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆண்கள் வேடத்தில் சென்ற கேரளாவைச் சேர்ந்த இரு இளம் பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த இளம் பெண்கள் ரேஷ்மா, சனிலா. 30 வயதுடைய இருவரும் இன்று அதிகாலை பம்பையிலிருந்து சபரிமலை நோக்கி ஆண் வேடத்தில் நடந்து சென்றனர். நீலிமலை அருகே இரு பெண்களையும் அடையாளம் கண்டு போராட்டக்காரர்களும், ஆண் பக்தர்களும் தடுத்து நிறுத்தினர். பெண்களின் பாதுகாப்புக்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை எச்சரித்ததுடன் 5 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து இரு பெண்களும் மலையேற முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் பெருமளவில் திரண்டு பாதையை மறித்து நின்றதால் பதற்றம் நிலவியது. 2 மணி நேர காத்திருப்புக்குப் பின் பெண்கள் இருவரையும் போலீசார் பம்பைக்கு பத்திரமாக திரும்ப அழைத்துச் சென்றனர். அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் தரிசிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக் குப் பின் கடந்த 2-ந் தேதி கேரளாவைச் சேர்ந்த பிந்து, கனகதுர்கா என்ற 2 பெண்கள் முதன்முதலாக ஐயப்பனை தரிசித்தனர்.

அதன் பின் பெண்கள் செல்ல முயன்றாலும் போராட்டக்காரர்கள் சபரிமலை பகுதியில் ஆங்காங்கே கண்காணிப்பில் படு தீவிரமாக உள்ளனர். இதனால் இன்றுஆண் வேடமிட்டுச் சென்றும் இரு பெண்களையும் அடையாளம் கண்டு விட்டனர்.

You'r reading ஆண்கள் வேடத்தில் சபரிமலை சென்ற இளம்பெண்கள் - தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காஞ்சனா 3 மோஷன் போஸ்டர்: ஒரே நாளில் 20 லட்சம் வியூவ்ஸ் - மகிழ்ச்சியில் ராகவா லாரன்ஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்