இந்தியாவின் 100ஆவது செயற்கைக் கோள் எடுத்த முதல் புகைப்படம் இதோ!

இந்தியாவின் 100-வது செயற்கைக் கோளான கார்ட்டோசாட்-2 எடுத்த முதல்புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் 100-வது செயற்கைக் கோளான கார்ட்டோசாட்-2 எடுத்த முதல்புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ), புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘கார்டோ சாட்-2’ உட்பட 31 செயற்கைக் கோள்களை ‘பிஎஸ்எல்வி சி-40’ ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமையன்று கடந்த ஜனவரி 12ஆம் தேதி அன்று விண்ணில் ஏவியது.

‘கார்டோசாட்-2’செயற்கைக்கோள், அதிநவீன சென்சார் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியதாகும். புவியின் மேற்பரப்பை மிக துல்லியமாக படமெடுக்கும் திறன் கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் அனுப்பும் படங்கள் வரைப்பட தயாரிப்பு, நில அளவீடு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள், பூமியில் இருந்து சுமார் 510 கி.மீ.உயரத்தில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோ வரலாற்றில் இது புதிய சாதனையாகவும், புதிய மைல் கல்லாகவும் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கார்ட்டோசாட்-2 தனது பணியைத் துவங்கியுள்ளது. கார்ட்டோசாட்-2 எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள ஹொல்கார் கிரிக்கெட் மைதானத்தை உள்ளடக்கிய இந்த படத்தை எடுத்துள்ளது.

You'r reading இந்தியாவின் 100ஆவது செயற்கைக் கோள் எடுத்த முதல் புகைப்படம் இதோ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆதரவற்றோர்களுக்கு அரசு வேலை: மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்