111 வயதான சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானர்!

Shivakumara Swamiji of Karnataka passes away

கர்நாடக மாநிலம் சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானர். 111 வயதான சிவக்குமாரசாமி உடல் நலக்குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மீண்டும் மடத்துக்கே கொண்டு செல்லப்பட்டார். அங்கு 15 நாட்களாக அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது.

இன்று காலை முதல் அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் மரணமடைந்தார்.

கர்நாடகாவில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத் வீர சைவர்களின் தலைமை பீடாதிபதியாக திகழ்ந்தவர் சிவக்குமாரசாமி. அவருடைய மரணச் செய்தி அறிந்தவுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வரா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமைய்யா, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் தும்கூர் சித்தகங்கா மடத்திற்கு விரைந்தனர்.

You'r reading 111 வயதான சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கும்பமேளா கூத்து.....நிர்வாண அகோரிகளுக்கு ஹைடெக் குடில்......வாட்டர் ஹீட்டர் வசதியும் உண்டு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்