அமித்ஷா ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு - மம்தா மீது பாஜக பாய்ச்சல்!

BJP says Amit Shahs chopper denied permission to land in Malda

மே.வங்கத்தில் அமித்ஷாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுத்ததற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

மால்டாவில் பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக கொல்கத்தாவில் இருந்து மால்டாவுக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் மால்டா விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடப்பதைக் காரணம் காட்டி ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுத்துவிட்டது மே.வங்க அரசு. அமித்ஷா கூட்டத்திற்கு இடையூறாக மம்தா திட்டமிட்டே அனுமதி மறுத்துள்ளதாக பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், மால்டா விமான நிலையத்தில் பணிகள் நடைபெற்றால் சில நாட்களுக்கு முன் மம்தா அங்கு ஹெலிகாப்டரில் சென்றது எப்படி?. வேண்டுமென்றே அனுமதி மறுக்கிறார்கள் என்று மம்தாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மே.வங்கத்தில் ஏற்கனவே ரத யாத்திரை நடத்த அமித் ஷா திட்டமிட்டிருந்தார். அதற்கும் மம்தா தடை போட்டதால் மால்டாவில் பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்.

You'r reading அமித்ஷா ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு - மம்தா மீது பாஜக பாய்ச்சல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என்னுடைய தொழில் நடிப்பு மட்டுமே..... அரசியல் ஆர்வம் துளியும் இல்லை- தமிழிசைக்கு நடிகர் அஜித் 'நோஸ்கட்’

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்