எழுதிக் கொடுத்ததை படிக்கத் தெரியல... கலெக்டரை உதவிக்கு அழைத்த அமைச்சர் - ம.பி.யில் நடந்த கூத்து!

MP Minister Imarti fails to read out speech

மத்தியப் பிரதேசத்தில் குடியரசு தின விழாவில் பெண் அமைச்சர் ஒருவர் எழுதிக் கொடுத்த உரையை படிக்கத் திணறினார். கலெக்டரை உதவிக்கு அழைத்து படிக்கச் சொன்னது விழாவில் பங்கேற்றவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

ம.பி. மாநிலத்தில் காங்கிரஸ் வென்று கடந்த மாதம் கமல்நாத் தலைமையில் ஆட்சியமைத்தது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இமார்தி தேவ் என்ற பெண் பதவியேற்றார்.

பள்ளி இறுதி வகுப்பு வரை படித்துள்ள இமார்தி கட்சியின் மகளிர் அணியிலும் முக்கிய பல பொறுப்புகளை வகித்துள்ளார். 3 முறை தொடர்ந்து எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தனது சொந்த தொகுதி உள்ள குவாலியரில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்று கொடியேற்றினார். பின்னர் எழுதிக் கொடுத்த உரையை படிக்க சிரமப்பட்டார். தட்டுத்தடுமாறி ஓரிரு வார்த்தைகளை படித்து விட்டு மீதியை மாவட்ட கலெக்டர் தொடருவார் என்று கூறிவிட்டு நகர்ந்து விட்டார்.

கலெக்டரும் வேறு வழியின்றி உரையைப் படித்தார். இதனைக் கண்டு விழாவில் விழாவில் பங்கேற்றவர்கள், படிக்கத் தெரியாத அமைச்சரா? என்று அதிர்ச்சியடைந்தனர். வேறு சிலரோ அரசுக் கோப்புகளை கொண்டு செல்லும் அதிகாரிகள் அமைச்சரிடம் உஷாராகத்தான் இருக்க வேண்டும் என கமெண்ட் அடித்தனர்.

You'r reading எழுதிக் கொடுத்ததை படிக்கத் தெரியல... கலெக்டரை உதவிக்கு அழைத்த அமைச்சர் - ம.பி.யில் நடந்த கூத்து! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டி - 90 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்