ரூ.5 லட்சம் வரை தனிநபர் வருமான வரி விலக்கு- மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அதிரடி சலுகைகள் அறிவிப்பு!

Personal Income Tax Deductions Rs 5 Lakhs - Action Declarations in Central Mid-Term Budget

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரிச்சலுகை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு மேலும் பல்வேறு சலுகைகளை வாரி இறைத்துள்ளது பாஜக அரசு.

தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் என்பதால் வரிச் சலுகை, புதிய திட்டங்கள் ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக ஏராளமான சலுகைகளைஅறிவித்துள்ளது மோடி அரசு .

தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 3 கோடிப் பயன் பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கும் ரூ.75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஹெக்டேருக்கும் கீழ் உள்ள விவசாயிகளுக்கு இடுபொருள் வாங்க ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் வழங்கப்படும் என்றும் இதனால் 12 கோடி கோடிப் பேர் பயனடைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர், மீனவர் நலனுக்காகவும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 60 வயதுக்குப்பின் ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளது பாஜக அரசு.இதன்படி15 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் மாத வருமானம் பெறுவோர் மாதம் ரூ 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளின் பேறுகால விடுமுறையை 26 வாரமாக அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெப்போதும் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் முன்னேற்றம், பணப்பற்றாக்குறை குறைந்துள்ளது, வங்கிகளின் வாராக்கடன் அதிக அளவில் வசூலிக்கப்பட்டுள்ளது என அடுக்கடுக்காக பாஜக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார் நிதியமைச்சர் பியூஸ் கோயல்.

 

You'r reading ரூ.5 லட்சம் வரை தனிநபர் வருமான வரி விலக்கு- மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அதிரடி சலுகைகள் அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெங்களூருவில் மிராஜ் போர் விமானம் விழுந்து தீப்பிடித்தது - விமானிகள் 2 பேரும் உயிரிழந்த சோகம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்