2014 தேர்தலில் பாஜக ஜெயிக்க நானும் காரணம் - அன்னா ஹசாரா தடாலடி!

Anna Hazare says bjp used me win election

2014 தேர்தலில் பாஜக வெற்றிக்கு என் போராட்டமும் காரணம். அப்போது என்னிடம் கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டனர் என்றும் ஹசாரே தெரிவித்துள்ளார்.

லோக்பால் மசோதா கொண்டு வருவதாகக் கூறிய பாஜக மத்தியிலும், மகாராஷ்டிராவிலும் இதுவரை கொண்டு வரவில்லை என குற்றம் சாட்டி மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் அன்னா ஹசாரே .மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான மாலேகான் சித்தியில் ஹசாரே 6-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்கிறார்.

இன்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ஹசாரே அளித்த பேட்டியில், 2011, 2014-ல் லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தியதை சாதகமாக்கிக் கொண்டது பாஜக .2014ல் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க என் போராட்டமும் உதவியது. அப்போது லோக்பால் சட்டம் கொண்டு வருவோம் என்று கூறிய வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டனர்.

இதே போன்று கெஜ்ரிவாலும் என்னைப் பயன்படுத்தி டெல்லி முதல்வரானவர் தான். இப்போது தேர்தல் நேரத்தில் என்னுடன் போராட் டத்தில் பங்கேற்க ஆசைப்படுகிறார். கெஜ்ரிவாலை ஒரு போதும் என் மேடைகளில் அனுமதிக்க மாட்டேன் என்று கெஜ்ரிவாலையும் விமர்சித்துள்ளார் ஹசாரே .

 

You'r reading 2014 தேர்தலில் பாஜக ஜெயிக்க நானும் காரணம் - அன்னா ஹசாரா தடாலடி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'பாஜகவில் உண்மை பேசுறது நீங்க ஒருத்தர் தான்'- கட்கரியை கலாய்த்த ராகுல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்