தமிழகம் செய்ய முடியாததை செய்த அசாம் - மோடிக்கு எதிராக நடந்த சிறப்பான, தரமான சம்பவம்!

Assam students trends goback modi protest again

தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல் வட மாநிலங்களில் அதாவது பாஜக ஆளாத மாநிலங்களிலும் மத்திய பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. அந்தவகையில் அசாம் மாநிலத்தில் சமீபகாலமாக பாஜகவுக்கு அதிக அளவு எதிர்ப்பு எழுந்துள்ளது. அதற்கு காரணம் இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்த நடவடிக்கைகள் தான்.

இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கையால் இந்தியாவில் தஞ்சம் புகுந்து நாளடைவில் இந்திய குடியுரிமை வாங்கியவர்களுக்கு சிக்கல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப் பட்டால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். சரி இதற்கும் அசாமுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் இருக்கிறது.

மற்ற நாடுகளிலிருந்து தஞ்சம் அடைந்தவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து தஞ்சம் அடைந்தவர்கள் அசாமின் பல பகுதிகளில் வசிக்கிறார்கள். இதனால் அங்கு மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன்படி கடந்த ஒரு மாதமாக அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த எதிர்ப்பின் உச்சகட்டமாக இன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. நேற்று அஸ்ஸாம் தலைநகர் கௌஹாத்தியிலிருந்து ராஜ்பவன் சென்ற பிரதமருக்கு, கௌஹாத்தி பல்கலைக்கழக வாயிலில் திரண்டிருந்த மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கறுப்புக் கொடி காட்டி `கோ பேக் மோடி’ ‘குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்’ என்ற முழக்கங்களையும் எழுப்பினர். பிரதமர் காரில் செல்லும் போது அவருக்கு மிக அருகில் சென்று கறுப்புக் கொடி காட்டி கெத்து காட்டினர். இதற்கு முன் இதேபோன்று தமிழகத்திலும் மோடி எதிராக மாநிலம் முழுவதும் திரண்டு கருப்புக்கொடி, கருப்பு பலூன் என போராடினாலும் மோடி கண்ணில் படும்படி யாரும் எதிர்ப்புகளை தெரிவிக்கவில்லை. அப்படி தமிழர்கள் செய்ய முடியாததை அசாம் மாணவர்கள் செய்து கெத்து காட்டியுள்ளனர். இந்த மாணவர்களின் போராட்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

You'r reading தமிழகம் செய்ய முடியாததை செய்த அசாம் - மோடிக்கு எதிராக நடந்த சிறப்பான, தரமான சம்பவம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் 30 நிமிடங்களில் விசாரணையை முடித்த சிபிஐ!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்