வருகிறது 20 ரூபாய் நாணயம் - பார்வை குறைபாடுள்ளோரும் எளிதில் அடையாளம் காணலாம்

RBI introduces new 20 rupees coin

புதிதாக 20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த நாணயம் அச்சிடப்பட்டுள்ளது.

தற்போது 10 ரூபாய் வரை மட்டுமே நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது. புதிதாக புழக்கத்திற்கு வர உள்ள 20 ருபாய் நாணயம் 27 மி.மீ சுற்றளவுடன் 12 வெளிமுனைப் பகுதிகளுடன் புதிய வடிவத்தில் அச்சிடப் பட்டுள்ளது. 8.54 கிராம் எடையுள்ள இந்த நாணயத்தில் 65 சதவீதம் செம்பு, 15% ஜிங்க், 20 % நிக்கல் கலந்து தங்க நிறத்தில் வருகிறது.

இந்த 20 ரூபாய் புதிய நாணயத்தை கண் பார்வை குறையுள்ளவர்களும் எளிதில் அடையாளம் காணும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். இதே போன்று புதிதாக வட்ட வடிவிலான 1,2,5,10 ரூபாய் நாணயங்களும் எளிதில் அடையாளம் காணும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நாணயங்களை டெல்லியில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் வெளியிட்டனர்.

You'r reading வருகிறது 20 ரூபாய் நாணயம் - பார்வை குறைபாடுள்ளோரும் எளிதில் அடையாளம் காணலாம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத்திய அரசு மூடி மறைத்தது, நாங்கள் வெளியிட்டோம் - இந்து என்.ராம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்