இந்தியாவில் ஆரோக்கியமான மக்கள் வாழும் நகரம் எது தெரியுமா...

Bangalore is the Indias healthiest city

இந்தியாவின் மிகவும் ஆரோக்கியமான நகரம் எது? என்பதை அரிய சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள GOQii எனப்படும் பிட்னெஸ் நிறுவனம், ‘இந்திய பிட் ரிப்போர்ட் 2019’ என்ற ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஆய்வு மேற்கொண்ட இந்நிறுவனம், சுமார் 7 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தி உள்ளது. மனிதர்களைப் பாதிக்கும், இருதய நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடு, மன அழுத்தம், தூக்கம் இன்மை, நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான நகரங்கள் பட்டியலில் பெங்களூர் முதல் இடத்தில் உள்ளது. இங்கு, வாழும் மக்கள் ஆரோக்கியமாகவும் ஒரு நாளைக்குச் சராசரியாக 6.56 மணி நேரம் உறங்குகின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, போதிய அளவிலான குடிநீர் வசதியும், மருத்துவ சேவைகள் எப்போதும் கிடைக்கும் விதமாக இந்நகரம் உள்ளது.

பெங்களூருவைத் தொடர்ந்து, மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தும் மக்கள் வாழும் நகரமாக புனே தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நகரங்கள் பட்டியலில் மும்பை இடம் பிடிக்கவில்லை என்றாலும், சுறுசுறுப்பாக இயங்கும் நகரமாக மும்பை உள்ளது என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. அதோடு, நடைப்பயிற்சி செய்யும் இந்திய மக்களின் சதவீதம் 22% இருந்து 33 சதவீதமாக உயர்ந்துள்ளது.



You'r reading இந்தியாவில் ஆரோக்கியமான மக்கள் வாழும் நகரம் எது தெரியுமா... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏழை மாணவர்களும் மருத்துவராக ‘நீட்’ தேர்வு அவசியம் –சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்