கார் லைசன்ஸ் கேட்டதால் கோபமாம் - போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ மகன்

UP Bjp MLAs son slaps policeman for asking car documents

உ.பி.யில் பதிவு நம்பர் இல்லாத காரை ஓட்டிச் சென்ற பாஜக எம்எல்ஏ ஒருவரின் மகனிடம் லைசென்ஸ் உள்ளிட்ட டாக்குமென்ட்களை கேட்ட காரணத்திற்காக, போலீஸ்காரரை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள கரோதா தொகுதி பாஜக எம்எல்ஏ ஜவஹர் ராஜ்புத் .இவருடைய மகன் ராகுல் ராம்புத் என்பவர் நம்பர் இல்லாத சொகுசு காரை ஓட்டிச் செல்ல, போலீஸ்காரர் ஒருவர் மடக்கியுள்ளார். காரின் லைசென்ஸ் உள்ளிட்ட டாக்குமென்ட்களை எடு என்று போலீஸ்காரர் கேட்க, தான் எம்எல்ஏ மகன் என்று கூறி மிரட்டியுள்ளார். ஆனாலும் போலீஸ்காரர் விடாப்படியாக லைசென்ஸை கேட்க, கோபமடைந்த எம்எல்ஏ மகன் போலீஸ்காரரை சரமாரியாக கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனால் போலீஸ்காரரும் ஆத்திரமடைந்து, எம்எல்ஏ வின் மகனை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று உரிய கவனிப்பு கொடுத்ததாகத் தெரிகிறது.

சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பாஜக எம்எல்ஏ ஜவஹர் ராஜ் புத், போலீஸ் ஸ்டேசன் சென்று கலாட்டா செய்த துடன், வலுக்கட்டாயமாக தனது மகனையும் மீட்டுச் சென்று விட்டாராம்.இச்சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்க, ஜான்சி மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாம்.

 

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - பாஜக எம்எல்ஏ உட்பட 6 பேர் உயிரிழப்பு

You'r reading கார் லைசன்ஸ் கேட்டதால் கோபமாம் - போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ மகன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து உதைத்து பன்றிக்கறி உண்ண வைத்து அட்டூழியம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்