வேலை வேண்டும்...மோடி கிட்ட சொல்லுங்க..! ஆங்கிலத்தில் விளாசும் கூலி தொழிலாளி

labourer spoke in english to make his point about the lack of jobs

தினசரி வேலை வேண்டும், பிரதமர் மோடி கிட்டப்போய் சொல்லுங்கள் என அங்கிலத்தில் பேசி அதிர வைத்திருக்கிறார் கூலி தொழிலாளி ஒருவர்.

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலின், முதல் கட்ட தேர்தல் நடந்துள்ள நிலையில், இந்திய தேர்தல் களம் பரபரப்பை எட்டியுள்ளது. வாட்ஸ் அப், ஃபேஸ் புக், ட்விட்டர் என சமூக ஊடகங்களில் தேர்தல் குறித்த செய்திகளும், கட்சி தலைவர்களின் பிரசார குறிப்புகளும், விடியோக்களும் ஆக்கிரமித்து உள்ளன. இதனிடையில், ஒரு சாமானிய தினசரி கூலி தொழிலாளி ஒருவரின் வீடியோ இன்று  சமூக ஊடகங்களில் வைரல் ‘ஹிட்’ ஆகி உள்ளது.

அந்த வீடியோவில் பேசும் தொழிலாளி பாகல்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் வேலை இருந்ததால் வாழ்வாதார நிலை சிறப்பாக இருந்தது என்று கூறும் அவர், தற்போது தான் வேலை செய்ய விரும்புகிறேன் ஆனால் வேலை இல்லை. வேலை கிடைக்காமல் எப்படி உணவு உண்பது. மோடி கிட்ட சொல்லுங்கள் எனக்கு வேலை வேண்டும் என்று ஆங்கிலத்தில் பேசி மோடியின் ஆட்சியை விமர்சித்துள்ளார். அவரின், ஆங்கிலப் புலமையைக் கண்டு சமூக ஊடகங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.  

You'r reading வேலை வேண்டும்...மோடி கிட்ட சொல்லுங்க..! ஆங்கிலத்தில் விளாசும் கூலி தொழிலாளி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுவையான சுண்டக்காய் வத்தல் குழம்பு ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்