காணாமல் போன 2000 ரூபாய் நோட்டுகள்...! அரசியல்வாதிகள் பதுக்கியது வாக்குக்கு விநியோகமாகுமா?

Reasons behind the Rs 2000 notes missing, is it distribute to voters in the Loksabha election

சமீப நாட்களாக 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் வெகுவாக குறைந்தது ஏன் என்ற சந்தேந்துள்ளது. தேர்தலுக்காக முன்கூட்டியே அரசியல்வாதிகளின் கைகளில் பதுக்கப்பட்ட இந்த நோட்டுக்கள் கடைசி நேரத்தில் வாக்காளர்களின் கைகளுக்கு பட்டுவாடா ஆகப் போகிறதா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே எந்தரோஸ் கலர் தாளான ரூ 2000 நோட்டுக்கள் புழக்கம் என்பது மிக மிக அரிதாகி விட்டது. வங்கிகளிலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் ரூ 500, 200, 100 ரூபாய் நோட்டுக்களே அதிகமாக வழங்கப்படுகிறது. மக்களின் கைகளிலும் 2000 ரூபாய் நோட்டுக்களை காண முடியவில்லை.

இதற்கெல்லாம் காரணம் நம் அரசியல்வாதிகள் தான் என்பது லேட்டாக தெரிய வந்துள்ளது. கோடி கோடியாக பதுக்குவதற்கு இந்த நோட்டுக்கள் எளிது என்பதால், முன் கூட்டியே பதுக்கி விட்டதாகவும், கடைசி நேரத்தில் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி பெரும் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பையே ஏற்படுத்தியுள்ளது.

You'r reading காணாமல் போன 2000 ரூபாய் நோட்டுகள்...! அரசியல்வாதிகள் பதுக்கியது வாக்குக்கு விநியோகமாகுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தோனி பாணியை பின்பற்றிய கோலி.. முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்