ஏப்.,24ல் விசாரணை...இல்லையெனில்,டிக்-டாக் செயலிக்கு தடை இல்லை! - உச்ச நீதிமன்றம்

Supreme Court asks Madras High Court to decide TikTok on April 24

டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து நாளை மறுநாள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது உச்ச நீதிமன்றம்.

சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டனர், அதனால் தீமை விளைவிக்கும் இந்த செயலிக்கு தடை விதிக்க கோரி எஸ். முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வலக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

மத்திய அரசின் வேண்டுகோள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ‘டிக்-டாக்’ செயலி நீக்கப்பட்டது. இதற்கிடையில், தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செயலியை உருவாக்கிய நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து வரும் ஏப்ரல் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தடை தளர்ந்ததாக கருதப்படும் என்று கூறு வழக்கை முடித்து வைத்தனர்.

பிரான்க் ஷோவுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி ஆப்பு

You'r reading ஏப்.,24ல் விசாரணை...இல்லையெனில்,டிக்-டாக் செயலிக்கு தடை இல்லை! - உச்ச நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோடி குறித்த விமர்சனம் - உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்