விமானம் பறக்கும் போது பாலியல் தொந்தரவு: பைலட் மீது பணிப்பெண் புகார்

Sexually disturbed when flying plane

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பைலட் மீது விமான பணிப்பெண் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

விமான சேவையில் ஈடுபட்டு வரும் இண்டிகோ நிறுவனம் இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. பெங்களூருவில் இருந்து டெல்லிக்கும் விமானத்தை இயக்கி வருகிறது. கடந்த 16ம் தேதி இண்டிகோ விமானம் வழக்கம் போல் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு கிளம்பி சென்றது.

நடுவானில் விமான பறந்து கொண்டிருந்தபோது அந்த விமான பைலட் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அநத பணிப்பெண் டெல்லி போலீசில் புகார் கொடுத்துள்ளார். விமான பணிப்பெண் கொடுத்த புகாரில், விமானி (பைலட்) வெந்நீர் வேண்டும் என்று கேட்டதால், காக்பிட்டுக்கு அறைக்கு வெந்நீரை கொண்டு சென்றேன். அப்போது அங்கு இருந்த மற்றொரு விமான கழிவறைக்கு சென்று விட்டார்.

தலைமை விமானி கையில் செல்போனுடன் என்னை வரவேற்றார். நான் அருகில் இருந்த சீட்டில் அமர்ந்தேன். அப்போது அவர் செல்பி எடுக்கலாம் என்றார். நான் மறுத்தேன். உடனே தலைமை விமானி எனக்கு பாலியில் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். இந்த சம்பவம் கழிவறைக்கு சென்ற பைலட் திரும்பி வருவதற்குள் நடந்தது.

மேலும் விமானம் அமிர்தசரஸில் நின்றபோது என்னிடம் தலைமை விமானி போன் நம்பர் கேட்டார். அதன் பிறகும் தொடர்ந்து தொல்லை கொடுத்தார். அடுத்து டெல்லிக்கு விமானம் வந்தபோது என்னை கட்டிப்பிடிக்க முயன்றார். இது தொடா்பாக சக விமான பணிபெண்கள் மற்றும் இண்டிகோ நிறுவனத்திடமும் கூறினேன் என்று அதில் கூறியுள்ளார்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாகப்பட்டினத்தில் இனி பெண்களை பார்த்து விசிலடிக்கவும் பயப்படணும்; அதிரடியாக களமிறங்கிய ’ஸ்த்ரீ சக்தி’ போலீஸ் குழு!

You'r reading விமானம் பறக்கும் போது பாலியல் தொந்தரவு: பைலட் மீது பணிப்பெண் புகார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான 66 மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்