என்னமா யோசிக்கறாங்க... அச்சு அசலா ரயில் பெட்டி .. ஆனா அது வாக்குச்சாவடி!

A polling station in Jharkhand designed as rail coach to attracted voters

ஜார்கண்ட் மாநிலத்தில், ஒட்டுப்போட வரும் வாக்காளர்களை கவரும் வகையில், வித்தியாசமான முறையில், அச்சு அசலாக ரயில் பெட்டி வடிவில் வாக்குச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் மக்களவைத் தொகுதியில், வரும் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதியின், துல்மி மண்டலத்திற்கு உட்பட்ட சடாக் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வாக்காளர்களை கவரும் விதத்தில் ஏதேனும் புதுமை செய்ய நினைத்த அப்பகுதி தேர்தல் அதிகாரிகள், அந்தப் பள்ளிக்கூடத்தின் அமைப்பை ரயில் பெட்டிகள் போல் அச்சு அசலாக வடிவமைத்து விட்டனர். இந்த புதுமையான ஐடியா அனைவரிடமும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்த புதுமையான ஐடியாவுக்கு காரணமான துல்மி மண்டல வட்டார வளர்ச்சி அதிகாரியான ஜெய சாங்கி முர்மு என்ற பெண் அதிகாரி கூறுகையில், வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஓட்டுப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ரயில் பெட்டி போன்று வாக்குச்சாவடி அமைத்தது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பள்ளிக்கூட மாணவர்களும் இதனை ஆச்சர்யமாக பார்த்துச் செல்வது மிகழ்ச்சி அளிக்கிறது என்றார்.

230 கி.மீ வேகம்... ஒடிசாவை புரட்டிப் போட்டது ஃபானி... பூரி அருகே அதிதீவிர புயலாக கரை கடந்தது!

You'r reading என்னமா யோசிக்கறாங்க... அச்சு அசலா ரயில் பெட்டி .. ஆனா அது வாக்குச்சாவடி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 4 தொகுதி இடைத்தேர்தல் ..! பிரேமலதா 4 நாள் மட்டும் பிரச்சாரம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்