என்ன அபிநந்தன் சார்... நீங்களுமா... பிஜேபிக்கு வாய்ஸ்... வீடியோவால் சர்ச்சை!

viral Video of Wing commander Abhinandan interacting with his colleagues

விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான்... இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் எப்16 போர் விமானத்தை துரத்திச் சென்று சுட்டு வீழ்த்திய வீரன். அப்போது தானும் பாகிஸ்தானிடம் சிறைபிடிக்கப்பட்டு, இந்தியா மற்றும் உலக நாடுகளின் நெருக்கடியால் மீண்டு வந்து ஒரே நாளில் ஒட்டுமொத்த இந்தியாவே அபிநந்தனை ஹுரோவாக கொண்டாடி மகிழ்ந்தது. பாகிஸ்தான் பிடியிலிருந்து மீண்டு வாகா எல்லையில் இந்திய மண்ணில்,அபிநந்தன் கம்பீர நடை போட்டு காலடி எடுத்து வைத்த காட்சிகளைப் பார்த்து மெய்சிலிர்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.


இதெல்லாம் நடந்து முடிந்து 2 மாதங்களாகி விட்டது. அபிநந்தனும் மீண்டும் பணியில் சேர்ந்து விட்டார் என்றும் அறிவிப்பு வெளியானது. இந்தக் காலக் கட்டத்தில் பொது வெளியில் அவருடைய நடமாட்டமோ, புகைப்படங்களோ வெளியாகாத நிலையில், தற்போது அபிநந்தன் சக வீரர்களுடன் உற்சாகம் பொங்க குதூகலமாக காட்சியளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைர லாகி, கூடவே சர்ச்சைகளும் றெக்கை கட்ட ஆரம்பித்துள்ளது.


119 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ எங்கே? எப்போது? எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் ஏதும் இல்லாத நிலையில், சக வீரர்களுடன் சிரித்து மகிழ்ந்து குதூகலமாக காட்சியளிக்கும் அபிநந்தன், சக வீரர்களுடன் உற்சாகமாக போட்டோ, செல்பிக்கு போஸ் கொடுக்கிறார். பின்னர் திடீரென சக வீரர்களுடன் 'பாரத் மாதா கீ ஜே' கோஷத்தை உச்சஸ்தாயியில் உரக்க ஒலிக்கிறார்.


இந்த வீடியோ நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது. கூடவே தேர்தல் நேரத்தில் இந்த வீடியோ வெளியானதன் காரணம் என்ன? ராணுவ கட்டுப்பாடு இதுதானா? ரகசியம் காக்கப்பப வேண்டிய ராணுவம் இருக்கும் இடத்தை வீடியோ எடுத்து காட்டிக் கொடுப்பதா? அபிநந்தனும் பிஜேபிக்கு வாய்ஸ் கொடுக்கிறாரா? தேர்தல் கமிஷன் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் ஏகத்துக்கும் விளாசி வருவது பெரும் சர்ச்சையாகியுள்ளது.


ஏற்கனவே பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் , தங்கள் பிரச்சாரத்தில் இந்திய ராணுவத்தின் வீர, தீரங்களை தங்கள் கட்சிக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் பேசி வருவது ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.இந்நிலையில் தான் திடீரென உலா வரும் அபிநந்தனின் வீடியோவும் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கெஜ்ரிவாலுக்கு கன்னத்தில் 'அறை' விட்ட இளைஞர்.. டெல்லியில் பரபரப்பு

You'r reading என்ன அபிநந்தன் சார்... நீங்களுமா... பிஜேபிக்கு வாய்ஸ்... வீடியோவால் சர்ச்சை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யோகி பாபு சந்தானம் இணைந்து செய்ய போகும் டகால்டி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்