ஞாபக சக்தி... பார்வை போச்சா..? - இதோ பாதாம் கொட்டை ..! சொட்டு மருந்து..! ம.பி.முன்னாள் முதல்வருக்கு வந்த பார்சல்

M.P Congress partymen sending almonds, eye drops to ex bjp CM Shiv Raj Singh Chauhan as gift

ம.பி.யில் ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பாஜக முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உங்களுக்கு கண் பார்வையும் போச்சு... ஞாபகசக்தியும் இல்லை... காதும் கேட்கல... இந்தாப் பிடிங்க என்று சிவராஜ் சிங் சவுகானுக்கு பாதாம் கொட்டை , கண் சொட்டு மருந்து, காது கேட்பதற்கான மருந்து வகைகளை காங்கிரசார் பார்சல் பார்சலாக அனுப்பி அவருக்கு பீதி ஏற்படுத்தியுள்ளனர்.

கடந்த டிசம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்தது காங்கிரஸ். இந்த 3 மாநிலங்களிலும் தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிப்படி, ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால், ம.பி.யில் பாஜக சார்பில் 3 முறை முதல்வராக இருந்து, இம்முறை பதவி இழந்த சிவராஜ் சிங் சவுகானோ, காங்கிரஸ் வெற்று விளம்பரம் தான் செய்கிறது. விவசாயிகள் யாருடைய கடன்களும் தள்ளுபடியானதாகத் தெரியவில்லை என்று மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்து விமர்சித்து வந்தார். காங்கிரஸ் தரப்பில் இதற்கு தக்க ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்தும், மீண்டும் மீண்டும் சிவ்ராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்ட காங்கிரசாருக்கு கோபம் வந்து விட்டது.

அதெப்படி? 21 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று ஆதாரங்களை காண்பித்தாலும் பொய்யாகவே பேசுவதா? கண் தெரியலையா? ஞாபக சக்தி போச்சா? சொன்னால் காதும் கேட்கலையா? என்று கூறி காங்கிரசார் நூதன முறையில் பதிலடி கொடுத்துள்ளனர். ஞாபக சக்திக்கு பாதாம் கொட்டை , கண் பார்வைக்கு சொட்டு மருந்து, காது கோளாறுக்கும் மருந்து என பார்சல் பார்சலாக சிவ்ராஜ் சிங்குக்கு அனுப்பி எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.

இந்தப் பார்சல் அனுப்பியது குறித்து ம.பி.மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான நரேந்திர சலுஜா கூறுகையில், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் எதையுமே ஏற்றுக் கொள்ளவும், புரிந்து கொள்ளவும் மறுக்கிறார் சவுகான் என்பதால் இந்த நூதனத்தை கடைப்பிடித்தோம் என்றார். சவுகானோ, பார்சலை இன்னும் பிரிக்கவில்லை. இதில் உள்ள எல்லாம் காங்கிரசாருக்குத்தான் தேவைப்படும் என்பதால் அவர்களுக்கே திருப்பி அனுப்பப் போகிறேன் என்று கூறிவிட்டார்.

தேனி வாக்கு எந்திர விவகாரம்; ஓபிஎஸ் தான் காரணம்...! அடித்துச் சொல்கிறார் ஈ.விகேஎஸ்!

You'r reading ஞாபக சக்தி... பார்வை போச்சா..? - இதோ பாதாம் கொட்டை ..! சொட்டு மருந்து..! ம.பி.முன்னாள் முதல்வருக்கு வந்த பார்சல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏழு பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு - தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்