மம்தா முகத்தை பிரியங்கா சோப்ராவுடன் மார்பிங் - மே.வங்க பாஜக அம்மணி கைது

Bjp women leader arrested in WB for sharing Mamata Banerjees morphed picture in social media

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் அட்டகாச உடையலங்காரத்துடன் மார்பிங் செய்து, மீம்ஸ்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக பெண்மணியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மே.வங்கத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்பதற்காக மம்தா பானர்ஜியுடன் மல்லுக்கட்டுகிறது பாஜக . இதனால் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மட்டுமின்றி அக் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களும் மம்தாவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒருகட்டமாக ஹாலிவுட் நட்சத்திரமான பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் படு பேஷனான ஆடையில் உலா வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை மம்தாவின் முகத்துடன் இணைத்து மீம்ஸ்களுடன் சமூக வலைதளங்களில் பரவ விட்டது மே.வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இது குறித்து திரிணாமுல் கட்சி சார்பில் ஹவுரா சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மார்பிங் தில்லாலங்கடியைச் செய்தது ஹவுராவைச் சேர்ந்த பிரியங்கா சர்மா என்ற பாஜக யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த பெண் நிர்வாகி என்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து அப்பெண்மணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading மம்தா முகத்தை பிரியங்கா சோப்ராவுடன் மார்பிங் - மே.வங்க பாஜக அம்மணி கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோடி கோடியாக சம்பளத்தை உயர்த்தும் அஜித்; அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்