மே 23க்குப் பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை! மாயாவதி, அகிலேஷ் அறிவிப்பு!

Getting ready for next step: Akhileshs loaded remark after Mayawati meet

தேர்தல் முடிவுகள் வரும் வரை காங்கிரஸ் பக்கம் சாயாமல் காத்திருக்க மாயாவதியும், அகிலேஷும் முடிவு செய்திருக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. அணி 300 தொகுதிகளை கைப்பற்றி, மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. காரணம், பொதுவாகவே மோடி எதிர்ப்பு அலை வீசுவதாகவும், குறிப்பாக தென்மாநிலங்களில் அது வெளிப்படையாக தெரிகிறது என்றும் அவர்கள் நினைத்திருந்தார்கள். மேலும், பா.ஜ.க. 200க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்தால் கூட அதை ஆட்சியமைக்க விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து விட்டு ஒவ்வொரு கட்சித்தலைவர்களையும் சந்தித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் அதிக இடங்களை கைப்பற்றக் கூடிய பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி தலைவர்களான மாயாவதி, அகிலேஷ் ஆகியோரையும் சந்தித்து பேசினார். இதன்பின், மாயாவதி டெல்லி வந்து மே 20ம் தேதி சோனியாவை சந்திப்பதாக இருந்தது. ஆனால், அதற்கு முன்பாக பா.ஜ.க. பெரும்பான்மை பெறும் என்று கருத்து கணிப்புகள் வரவே, மாயாவதி தனது டெல்லி புரோக்ராமை கேன்சல் செய்து விட்டார்.

இந்த நிலையில், நேற்று(மே20) மாயாவதியை லக்னோவில் மால் அவின்யூவில் உள்ள அவரது வீட்டில் அகிலேஷ் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இருவரும் ஆலோசித்தனர். அவசரப்பட்டு காங்கிரஸ் பக்கம் சாய்ந்தால், அது மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையும்பட்சத்தில் தொல்லையாக இருக்கும் என்று இருவரும் ஆலோசித்தனர். பா.ஜ.க. அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் தனிப்பெரும் கட்சியாக வந்தால், அதற்கு வெளியில் இருந்து ஆதரவு தரலாமா, கூட்டணி அரசு அமைப்பதா அல்லது தொடர்ந்து எதிர்க்கட்சியாக இருப்பதா என்பது குறித்தெல்லாம் அவர்கள் ஆலோசித்தனர். கடைசியில், மே 23ம் தேதி வரை எந்த சைடும் எடுக்காமல் மவுனம் காக்க முடிவெடுத்தனர்.

இதன்பின், இந்த சந்திப்பு குறித்த படத்தை ட்விட் செய்துள்ள அகிலேஷ், ‘‘அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகிறோம்’’ என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், கருத்து கணிப்பில் உ.பி.யில் மொத்தம் உள்ள 80 இடங்களில் பா.ஜ.க. அணி 49 வரை கைப்பற்றும் என்றும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி 29 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் மட்டுமே கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதை மறுத்துள்ள அகிலேஷ், தங்கள் அணி நிச்சயம் 56 இடங்களை பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

மு.க.ஸ்டாலினை சந்திக்கும் தெலுங்கானா முதல்வர்.! பிடி கொடுக்குமா திமுக?

You'r reading மே 23க்குப் பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை! மாயாவதி, அகிலேஷ் அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய சீருடை அறிமுகம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்