ldquoசீன ஊடுருவலைத் தடுக்க வேண்டும்rdquo : மாலத்தீவு விவகாரத்தில் மோடி- ட்ரம்ப் கூட்டணி

மாலத்தீவு விவகாரத்தில் சீன ஊடுருவல்களைத் தடுக்க பிரதமர் மோடி உடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

மாலத்தீவுகளில் அந்நாட்டு அதிபருக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே நிலவிய குழப்பங்கள் அந்நாட்டின் ஆட்சி களையும் நிலை வரை மோசமாகியுள்ளது. மாலத்தீவுகள் அதிபர் அப்துல்லாவுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களே செயல்பட்டதையடுத்து அந்த உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர். இதனால் அதிபரின் ஆட்சிக்கு முடிவு ஏற்படும் நிலை உருவானது.

நெருக்கடியை சமாளிக்க மாலத்தீவுகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதையடுத்து எதிர்கட்சிகளின் தலைவர், அந்நாட்டின் தலைமை நீதிபதி உள்ளிட்ட நாட்டின் முக்கிய, உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டனர்.

அவசர நிலையை எதிர்த்தும் ஆளுங்கட்சியின் அராஜப் போக்கைக் கண்டித்தும் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியின் வாயிலாகக் கலந்து உரையாடியதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தியா உடனான ராணுவ மற்றும் பொருளாதார மேம்பாட்டு கூட்டணி அமைத்துக்கொள்ளவும் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

You'r reading ldquoசீன ஊடுருவலைத் தடுக்க வேண்டும்rdquo : மாலத்தீவு விவகாரத்தில் மோடி- ட்ரம்ப் கூட்டணி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒரு தொகுதியில் தோற்றாலும் அரசியலை விட்டு விலகுவோம் - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. அதிரடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்