அடுத்த ஆண்டு முதல் பள்ளி, கல்லூரிகளில் யோகா கட்டாயம்

Ayush ministers proposal to HRD ministry make yoga compulsory in schools colleges

அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் யோகா கட்டாயப் பாடமாக கொண்டு வரப்படும் என்று ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க சர்வதேச யோகா தினம் பல்வேறு நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 21ம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் இந்த ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை கவனித்து வரும் ஆயுஷ்(ஆயர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி) துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறியதாவது:

ராஞ்சியில் வரும் 21ம் தேதி நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், பல்வேறு அறிஞர்களும் பங்கேற்கின்றனர்.

பள்ளிகளில் உடற்பயிற்சிக் கல்வியில் யோகாவை சேர்த்து, கட்டாயப் பாடம் ஆக்க வேண்டுமென்று மனித வள மேம்பாட்டு துறைக்கு ஏற்கனவே பரிந்துரை அனுப்பியுள்ளோம்.

அதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும். எனவே, அடுத்த ஆண்டு(2020-2021) முதல் பள்ளிகளில் யோகா கட்டாயப் பாடமாக கொண்டு வரப்படும். அதே போல், கல்லூரிகளிலும் யோகா கட்டாயப் பாடம் ஆக்கப்படும்.

தற்போது ேயாகா 200 நாடுகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.

You'r reading அடுத்த ஆண்டு முதல் பள்ளி, கல்லூரிகளில் யோகா கட்டாயம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குற்றாலத்தில் சாரல் தொடங்கியாச்சி.. குதூகல குளியலுக்கு தயாரா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்