பலான வேலைக்கு மறுத்த பப் டான்சருக்கு அடி உதை 4 பெண்கள் கைது, ஒருவர் ஓட்டம்

Hyderabad bar dancer allegedly stripped, thrashed for refusing sex with customers

ஐதராபாத்தில் இரவு விடுதி ஒன்றில் நடனமாடும் பெண்ணை, பலான தொழிலுக்கு கட்டாயப்படுத்திய 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐதராபாத்தில் பேகம்பட் பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் சுதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண், டான்ஸராக கடந்த மார்ச் மாதம் வேலைக்கு சேர்ந்தார். அந்த விடுதியில் நடனமாடும் டான்ஸர்களை ஒருங்கிணைத்து வேலை வாங்கும் பணியில் 4 பெண்கள் இருந்தனர். அவர்களில் 2 பேரும் டான்ஸ் ஆடுவார்களாம்.

இந்த விடுதியில் டான்ஸ் முடித்து வீட்டுக்கு கிளம்பும் இளம்பெண்களை பாலியல் தொழிலுக்கு வருமாறு அந்த 4 பெண்களும் வற்புறுத்தியிருக்கிறார்கள். ஆனால், சுதாவுக்கு அதில் விருப்பம் இல்லாமல் மறுத்து வந்தார். அதன்பின், அந்த பெண்களும், ஓட்டல் உரிமையாளரும் சுதாவை அடித்து உதைத்துள்ளனர். இதனால், சுதா வேலைக்கு வர மறுத்துள்ளார். ஆனாலும், அவரை மிரட்டி வர வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், சுதாவை கஸ்டமர்களிடம் செக்ஸ் வைத்து கொள்ளுமாறு அவர்கள் கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தனர். இதையடுத்து, சுதா திடீரென போலீசில் புகார் கொடுத்து விட்டார். இதையடுத்து, போலீசார் அங்கு வந்து 4 பெண்களையும் கைது செய்தனர். உரிமையாளர் தப்பி ஓடி விட்டார். அந்த பெண்கள் மீது இ.பி.கோ. 354, 509, 506, 323 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து தெலங்கானா பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் வெளிவந்துள்ளன. இதையடுத்து, பஞ்சகுட்டா போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் போலீஸ் கமிஷனர் மகேந்தர ரெட்டி அறிக்கை கேட்டிருக்கிறார்.

நயன்தாரா காணாமல் போனால்தான் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா? உயர்நீதிமன்றம் காட்டம்

You'r reading பலான வேலைக்கு மறுத்த பப் டான்சருக்கு அடி உதை 4 பெண்கள் கைது, ஒருவர் ஓட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிளாஸ்டிக் பைகள் இருக்கிறதா? கண்காணிப்பு குழுக்கள் சோதனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்