பீகாரில் 128 குழந்தைகளை கொன்ற மூளைக்காய்ச்சல்

Death toll touches 128 in Muzaffarpur due to encephalitis

பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் பரவுவதை இது வரை கட்டுப்படுத்த முடியவில்லை. இக்காய்ச்சலால் 128 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குழந்தைகளை மூளைக்காய்ச்சல் பாதித்து வருகிறது. மாநில அரசும், மத்திய அரசும் எவ்வளவோ முயற்சி செய்தும் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் வந்து, நோய் பாதித்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தை காய்ச்சல் அதிகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது முசாபர்நகரில்தான். இங்குள்ள எஸ்.கே.எம்.சி.எச் மருத்துவமனையில் மூளைக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 108 குழந்தைகள் இறந்துள்ளன.

இது தவிர, பாகல்பூர், கிழக்கு சாம்பரான், சமஸ்டிப்பூர் உள்பட 16 மாவட்டங்களில் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் பரவியுள்ளது. இந்த மாவட்டங்களில் இது வரை 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

தற்போது தனியார் மருத்துவமனைகளும் ஆங்காங்கே முகாம்களை அமைத்து குழந்தைகள் சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு குழந்தைகளை பரிசோதித்து வருகின்றனர். மேலும், மாநில அரசும் பல்வேறு தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! 'தமிழ்புலிகள்' அமைப்பின் நிர்வாகி போக்ஸோவில் கைது

You'r reading பீகாரில் 128 குழந்தைகளை கொன்ற மூளைக்காய்ச்சல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மழை வேண்டி அதிமுக சார்பில் யாக பூஜை.... அமைச்சர்கள் பயபக்தியுடன் பங்கேற்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்