சந்திரயான்-2 திட்டமிட்டபடி ஜூலை15ல் ஏவப்படும் : இஸ்ரோ

chandrayan-2 will be launched on july 15th as announced earlier : sivan

சந்திரயான்-2 விண்கலத்தை திட்டமிட்டபடி வரும் 15ம் தேதி விண்ணில் செலுத்துவோம். மழை வந்தாலும் இதில் பாதிப்பு ஏற்படாது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் இன்று காலை வந்து தரிசனம் செய்தார். அவரை கோயில் இணை ஆணையர்கள் தர்மா ரெட்டி, பாலாஜி ஆகியோர் வரவேற்று உபசரித்தனர்.

தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வந்த சிவன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘சந்திராயன்-2 விண்கலம், திட்டமிட்டபடி வரும் 15ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும். மழை பெய்தாலும் விண்கலம் அனுப்பும் பணி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. சந்திராயன்-2 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் இறங்கி, ஆய்வுப் பணியை மேற்கொள்ளும்.

வரும் 2021ம் ஆண்டு டிசம்பரில் ககன்யான் விண்கலன் மூலமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் விண்வெளிக்கு செல்லும் விஞ்ஞானிகளை தேர்வு செய்து, பயிற்சி அளிக்கப்படும்’’ என்று கூறினார்.

அயோத்தி மத்தியஸ்தர் குழு 18ம் தேதி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

You'r reading சந்திரயான்-2 திட்டமிட்டபடி ஜூலை15ல் ஏவப்படும் : இஸ்ரோ Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெண் அதிகாரியை படம் பிடித்த இணை கமிஷனர் சஸ்பெண்ட்; அறநிலையத்துறை அசிங்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்