மும்பையில் 10 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ ராட்சத ஏணி உதவியால் 100 பேர் மீட்பு

Fire breaks out in Mumbai multi storey building, more than 100 rescued

மும்பையில் அரசின் தொலை தொடர்புக நிறுவனத்தின் (எம்டிஎன்எல்) அலுவலகம் அமைந்துள்ள 10 மாடி கட்டிடத்தில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது. மொட்டை மாடியில் சிக்கித் தவித்த 100-க்கும் மேற்பட்டோரை கடும் போராட்டத்திற்கு இடையே ராட்சத ஏணியின் உதவியால் மீட்புப் படையினர் மீட்கப்பட்டனர்.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 10 மாடி கட்டிடத்தின் அரசுக்குச் சொந்தமான எம்டிஎன்எல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் 3வது மற்றும் 4-வது மாடியில் இன்று மாலை 3.30 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீயால் அந்தக் கட்டிடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் கீழ்மாடிகளில் இருந்த ஊழியர்கள் பதறியடித்தபடி வெளியில் ஓடி வந்து உயிர் தப்பினர்.

தீப்பிடித்த மாடிக்கு மேலே இருந்தவர்கள் உயிர் தப்ப மொட்டை மாடிப் பகுதிக்கு ஓடிச் சென்று குவிந்தனர். கரும்புகை மூட்டம் சூழ்வதைக் கண்ட அவர்கள் மொட்டை மாடியில் இருந்து கைகளை அசைத்து அபயக்குரல் எழுப்பினர்.

தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்து 14 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கட்டிடத்திற்குள் சிக்கித் தவித்தவர்களை மீட்க நவீன ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டன. பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்த வந்து நீண்ட போராட்டத்திற்குப் பின் 100-க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.

தீ விபத்தால் கடும் புகை மூட்டம் எழுந்ததால் தீயணைப்பு படை வீரர்கள் பலரும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். 4 நேரமாக சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடந்த இந்த மீட்புப் பணிகளைக் காண பாந்த்ரா பகுதியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அவர்களைக் கட்டுப்படுத்தவும் போலீசார் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 10 மாடிக் கட்டிடத்தில் பிடித்த தீ கட்டுப்படுத்தப்பட்டாலும் புகை மூட்டமாக காணப்படுவதால் உயிர்ச் சேதம் பற்றி இன்னும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

You'r reading மும்பையில் 10 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ ராட்சத ஏணி உதவியால் 100 பேர் மீட்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான்-2'- இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆரவாரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்