அடேங்கப்பா! - ராஜஸ்தானில் பூமிக்கடியில் 11 கோடி டன் தங்கம் இருக்கிறதாம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர், பன்ஸ்வாரா பகுதியில் பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 11 கோடி டன் தங்கம் இருப்பதை புவியியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர், பன்ஸ்வாரா பகுதியில் பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 11 கோடி டன் தங்கம் இருப்பதை புவியியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஜெய்ப்பூரில் இந்திய புவியியல் மையத்தின் இயக்குநர் என் குடும்பா ராவ் கூறுகையில், “ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா, உதய்பூர் பகுதிகளில் பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் தங்கம் இருப்பதை உறுதி செய்துள்ளோம். ஏறக்குறைய 11.48 கோடி டன் எடை இருக்கும்.

தற்போது நடந்துவரும் சுரங்கப் பணியில் செம்பு, தங்கம் ஆகியன அந்த பகுதிகளில் கிடைத்து வருகிறது. மேலும், சிக்கர் மாவட்டத்தில் நீம் கா தானா பகுதியிலும் இதுபோல் தங்கம், செம்பு உள்ளிட்ட உலோக தாதுக்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம்.

இது தவிர்த்து ஜெய்ப்பூரில் நடந்து வரும் அகழ்வாராய்வுப் பணியில் தங்கம், செம்பு, ஈயம், துத்தநாகம் ஆகியவை கிடைக்கும் எனத் தெரிகிறது.

ராஜ்பூரா, தரிபா சுரங்கத்தில் ஆய்வாளர்கள் கணிப்பின்படி, 35 லட்சம் டன் ஈயம், துத்தநாகம் பொதிந்து கிடைக்கிறது. மேலும், பில்வாரா பகுதியில் 8 கோடி டன் செம்பு இருப்பதையும் உறுதி செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

You'r reading அடேங்கப்பா! - ராஜஸ்தானில் பூமிக்கடியில் 11 கோடி டன் தங்கம் இருக்கிறதாம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தென் ஆப்பிரிக்க மண்ணில் முதன் முறையாக தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்