வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் பயணிகளை பத்திரமாக மீட்டது பேரிடர் மீட்புப் படை

Mumbai flood, more than 700 passengers rescued from Mahalaxmi Express by NDRF team

மகாராஷ்டிராவில் மும்பை அருகே நடுவழியில்,மழை வெள்ளத்தின் நடுவே சிக்கிக் கொண்ட மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். 10 மணி நேரத்திற்குள் மேலாக உயிரைக் கையில் பிடித்தபடி தவித்த 700 -க்கும் மேற்பட்ட பயணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், கடற்படை மற்றும் விமானப் படையினரும் படகு, ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்டது, பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து கன மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் ஏற்கனவே 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வெள்ளக்காடான மும்பை நகரம் மீண்டும் தத்தளிக்கிறது. நேற்று மாலை முதல் கொட்டித் தீர்க்கும் கன மழையால் மும்பை மட்டுமின்றி மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களும் வெள்ள்தால் பாதிக்கப்பட்டு, ரயில், விமானப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் மும்பையில் இருந்து கோலாப்பூர் சென்ற மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. வங்கானி எனும் அருகே சுற்றிலும் மழை நீர் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் அதிகாலை 3 மணிக்கு நிறுத்தப்பட்ட இந்த 3 ரயிலில் 700-க்கும் மேற்பட்ட சிக்கிக் கொண்டு தவித்தனர்.

ரயில் வெள்ளம் நடுவே சிக்கிக் கொண்ட தகவல் நாடு முழுவதும் பெரும் பரவியது. மகாராஷ்டிர மாநில அரசும் மத்திய உள்துறையும் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, தேசிய பேரிடர் மீட்புப் படை, விமான மற்றும் கப்பல் படையினரை முடுக்கி விட்டது. தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் காற்று நிரப்பிய ரப்பர் படகுகள் மூலம் பயணிகளை பத்திரமாக கரை சேர்த்தனர்.விமானப் படை மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்களில் பறந்த வீரர்களும் பயணிகள் பலரை மீட்டனர்.

பல மணி நேர போராட்டத்திற்குப் பின் 700-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினரால் போர்க்கால வேகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

You'r reading வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் பயணிகளை பத்திரமாக மீட்டது பேரிடர் மீட்புப் படை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இவற்றை செய்தால் எப்போதும் ஆரோக்கியம்தான்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்