பாதிக்கப்பட்ட உன்னோவ் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு, சிஆர்பிஎப் பாதுகாப்பு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Supreme Court orders Rs 25 lakh compensation, CRPF security for Unnao rape survivor

உன்னோவ் இளம்பெண் பலாத்காரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு, வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து சிபிஐயிடம் கேட்டனர். சிபிஐ அறிக்கை அளிக்க அவகாசம் கோரியது. அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.

இதன்பின், பிற்பகலில் சிபிஐ இணை இயக்குனர் சம்பத் மீனா ஆஜராகி, விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கினார். இதைத் தொடர்ந்து, உன்னோவ் பலாத்காரம், விபத்து உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான 5 வழக்குகளை, லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து டெல்லியில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் விபத்து வழக்கு விசாரணையை 15 நாட்களில் முடிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது. டெல்லி நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் தொடர்ச்சியாக 45 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் விருப்பப்பட்டால் நாட்டில் வேறு எந்த மருத்துவமனையிலும் அவரை சேர்த்து சிகிச்சை அளிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது. அத்துடன் அவருக்கு 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக நாளைக்குள் வழங்க உ.பி.மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே போல், அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு சி.ஆர்.பி.எப் படை பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டனர்.

ஐகோர்ட் நீதிபதி ஊழலை சிபிஐ விசாரிக்க அனுமதி; தலைமை நீதிபதி அதிரடி

You'r reading பாதிக்கப்பட்ட உன்னோவ் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு, சிஆர்பிஎப் பாதுகாப்பு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உன்னோவ் பலாத்கார வழக்குகள் டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்