பூடானுக்கு 2 நாள் பயணமாக ஆக.17ல் மோடி செல்கிறார்

Narendra Modi will visit Bhutan on 17-18 August

பிரதமர் நரேந்திர மோடி வரும் 17, 18 தேதிகளில் பூடானில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.


பிரதமர் மோடி முதல் முறை ஆட்சியில் இருந்த போது பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அண்டை நாடான பூடானுக்கு பதவியேற்ற சில மாதங்களுக்குள் சென்றார். தற்போது 2வது முறையாக பதவியேற்றுள்ள மோடி, வரும் 17, 18 தேதிகளில் பூடான் நாட்டுக்கு அந்நாட்டு பிரதமர் லோடாய் ஷெரிங் அழைப்பின் பேரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.


பூடானில் மாங்டெச்சுவில் 720 மெகாவாட் நீர் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்திற்கு கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியன்று இந்தியாவுடன் இருதரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அண்டை நாடுகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவ வேண்மென்று இந்தியா கொள்கை முடிவெடுத்திருக்கிறது. இதன்படி, பூடானில் 10 ஆயிரம் மெகாவாட் நீர்மின் சக்தி திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


பூடான் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லோடாய் ஷெரிங்குடன் இருதரப்பு வர்த்தக கலாச்சார உறவுகள் குறித்து பேசுகிறார். பின்னர், அந்நாட்டு மன்னர் வாங்சுக்கையும் சந்தித்து பேசுகிறார். இந்த பயணத்தால் இருநாடுகளிடையே உறவு மேலும் வலுப்பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டது தற்காலிகம்தான்; பிரதமர் மோடி உறுதி

You'r reading பூடானுக்கு 2 நாள் பயணமாக ஆக.17ல் மோடி செல்கிறார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குற்றால அருவிகளில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு; பயணிகள் குளிக்க தடை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்