காங்கிரஸ் முன்னாள் கொறடா பாஜகவி்ல் இணைந்தார்

Bhubaneswar, joins Bharatiya Janata Party

காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா முன்னாள் கொறடா புவனேஸ்வர் காலிட்டா, பாஜகவில் இணைந்தார்.


ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 பிரிவை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. மிகவும் சர்ச்சைக்குரிய இந்த விஷயத்தில் மத்திய அரசு அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்து விட்டது என்று பல கட்சிகள் குற்றம்சாட்டின. பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பும் தெரிவித்தன.


இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் அரசின் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், மற்றொரு பிரிவினர் கடும் எதிப்பாகவும் கருத்து கொண்டிருந்தனர். கடந்த திங்கட்கிழமை, மாநிலங்களவையில் இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை கொறடா புவனேஸ்வர் காலிட்டா பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.


இந்நிலையில், காங்கிரஸில் இருந்து விலகிய அவர் தனது நிலைப்பாடு குறித்து பின்னர் தெரிவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், புவனேரஸ்வர் காலிட்டா இன்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்பாக பாஜகவில் இணைந்தார்.

You'r reading காங்கிரஸ் முன்னாள் கொறடா பாஜகவி்ல் இணைந்தார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு நன்றி; மு.க.ஸ்டாலின் உருக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்