பிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்து உமர் அப்துல்லா கட்சி வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

National Conference moves SC against Centres decision to nullify Article 370petition

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.


இந்நிலையில், அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இக்கட்சியின் நிர்வாகிகள் முகமத் அக்பர் லோன், ஹஸ்நயின் மசூதி ஆகியோர், மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், அரசியல் சட்டப்பிரிவு 370 தொடர்பாக குடியரசு தலைவர் பிறப்பித்த உத்தரவை சட்டவிரோதமானது என்று அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.


ஏற்கனவே, டெல்லி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில், ‘‘காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்திருப்பது சட்டவிரோதமானது. அம்மாநில சட்டசபையில் ஆலோசிக்கப்படாமல், இந்த பிரிவு நீக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரலாம் எனத் தெரிகிறது.

காஷ்மீரில் முதல்முறையாக 22 மாவட்டத்திலும் ஊரடங்கு; குலாம் நபி குற்றச்சாட்டு

You'r reading பிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்து உமர் அப்துல்லா கட்சி வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கருணாநிதி நினைவிடத்தில் கதிர் ஆனந்த் மரியாதை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்