மாருதி சுசுகி கம்பெனியில் 3,000 தொழிலாளர் வேலையிழப்பு

Maruti Suzuki cuts 3,000 contract jobs as auto industry faces slowdown

மாருதி சுசுகி நிறுவனம், மூவாயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது. இந்தியாவிலும் பொருளாதார நிலை சரிந்து வருகிறது. இதை சரி செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், கட்டுமானம், ஆட்டோமொபைல் உள்பட பல்வேறு தொழிலிலும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆட்டோமொபைல் துறையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களாக வாகனங்கள் விற்பனை சரிந்து வருகிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாகன விற்பனை அதிகரித்து வருவது வழக்கம். ஆனால், இப்போது ஜூலை வரை தொடர்ந்து 9வது மாதமாக விற்பனை சரிந்து வருகிறது. இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் பலவும் உற்பத்தியை குறைத்து வருகின்றன.

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம், டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கம்பெனியின் சேர்மன் ஆர்.சி.பார்கவா பேசுகையில், ‘‘வாகனங்கள் விற்பனை சரிந்து வருவதால், உற்பத்தியை குறைக்க வேண்டியிருக்கிறது. பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டது, அதிக வரி விதிப்பு போன்ற காரணங்களால் வாகனங்கள் விற்பனை குறைந்து விட்டது. உற்பத்தியை குறைப்பதால், வேலை இழப்பு தவிர்க்க முடியாததாகி விட்டது.

எனவே, 3 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டோம்’’ என்று தெரிவித்தார். இந்த ஆண்டில் மாருதி நிறுவனம், மொத்த வாகன உற்பத்தியில் 50 சதவீத வாகனங்களை சி.என்.ஜி. எரிபொருள்(கேஸ்) பயன்படுத்தும் வாகனங்களாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மோடியின் இங்கிலீஸ் நல்லாத்தான் இருக்கு... ஆனா பேசத்தான் மாட்டேங்கிறார்... டிரம்ப் ஜோக்

You'r reading மாருதி சுசுகி கம்பெனியில் 3,000 தொழிலாளர் வேலையிழப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - துப்பாக்கி குண்டு காயத்துக்கு பிளாஸ்திரியா? மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி நிதியுதவி பற்றி ராகுல் விமர்சனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்