அமராவதியில் பெருமாள் கோயில் நிதியை குறைத்தது தேவஸ்தானம்

TTD to trim excesses and reduce cost of Lord Venkateshwara temple project in Amaravati

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் வெங்கடாஜலபதி கோயில் அமைக்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.150 கோடியில் இருந்து ரூ.36 கோடியாக குறைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.

திருப்பதி திருமலை தேவஸ்தான போர்டு சேர்மன் ஒய்.வி.சுப்பாரெட்டி, நிருபர்களிடம் கூறியதாவது:

ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில், வெங்கடாஜலதி கோயில், பூங்காக்கள், திருமண மண்டபங்கள் போன்றவை அமைக்க, தெலுங்குதேசம் ஆட்சியின் போது திட்டமிடப்பட்டது. இதற்காக சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்த தேவஸ்தானம் போர்டு நிர்வாகம் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. ஆனால், ஜெகன் அரசு பதவியேற்ற பின்பு, அமராவதியில் ஸ்ரீவெங்கடாஜலபதி திவ்ய ஷேத்திரம் என்ற பெயரில் கோயில் மட்டும் கட்ட முடிவெடுக்கப்பட்டது. எனவே, நிதி ஒதுக்கீடு ரூ.150 கோடியில் இருந்து ரூ.36 கோடியாக குறைக்கப்படும்.

தேவஸ்தானம் போர்டு சார்பில், அமராவதியில் பூங்காக்கள், மண்டபங்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படும். தலைநகர் வளர்ச்சிப் பணிகளையும், சுற்றுலா மேம்படுத்தும் பணிகளையும் செய்ய வேண்டிய அவசியம் தேவஸ்தானத்திற்கு கிடையாது. கடந்த கால சந்திரபாபு நாயுடு அரசு அதை செய்தது. நாங்கள் தேவஸ்தான நிதியில் அதையெல்லாம் செய்ய மாட்டோம். ஜெகன் அரசு இதில் உறுதியாக இருக்கிறது.
இவ்வாறு ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்தார்.

அமமுகவில் வகித்த அதே பதவி: திமுக கொள்கை பரப்பு செயலாளரானார் தங்க. தமிழ்செல்வன்

You'r reading அமராவதியில் பெருமாள் கோயில் நிதியை குறைத்தது தேவஸ்தானம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 5 டிரில்லியன் பொருளாதாரம்: நிர்மலாவை விமர்சிக்கும் சுப்பிரமணிய சாமி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்