வெங்காயம் தர மறுப்பதா? வங்கதேச பிரதமர் கவலை..

What Bangladesh PM Sheikh Hasina told her cook after Indias onion export ban

இந்தியா இப்படி திடீரென வெங்காயம் ஏற்றுமதியை நிறுத்தினால், நாங்க என்ன செய்ய முடியும்? சமையலில் வெங்காயம் சேர்க்க வேண்டாம் என்று சமையல்காரரிடம் சொல்லி விட்டேன் என்று கிண்டலாக கூறியுள்ளார் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா. வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

டெல்லியில் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்தியா இப்படி திடீரென வெங்காயம் ஏற்றுமதியை நிறுத்தி விட்டால், நாங்கள் என்ன செய்ய முடியும்? நான் என் சமையல்காரரிடம் உணவில் வெங்காயம் சேர்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.

வெங்காய ஏற்றுமதிக்கு திடீரென தடை விதித்திருக்கக் கூடாது. முன்கூட்டிய தகவல் தெரிவித்து அதை செயல்படுத்தியிருக்க வேண்டும் என்றார்.

You'r reading வெங்காயம் தர மறுப்பதா? வங்கதேச பிரதமர் கவலை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராட்சசன் படத்துக்கு 4 அமெரிக்க விருது.. விஷ்ணு விஷால்- அமலாபால் ஹேப்பி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்