துர்கா சிலை கரைக்கச் சென்ற 10 பேர் ஆற்றில் மூழ்கி பலி..

10 people drown in Parbati river during durga idol immersion in Rajasthans Dholpur

ராஜஸ்தானில் துர்கா சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது நீரில் மூழ்கி 10 பேர்் உயிரிழந்தனர்.

வடமாநிலங்களில் விநாயகர் சதூர்த்தியன்று பெரிய பிள்ளையார் வைத்து வணங்கி விட்டு, ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைப்பது போல், நவராத்திரி விழாவில் துர்கா சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம், தோல்பூரில் நேற்று மாலை நவராத்திரி விழா நடைபெற்றது. துர்கா சிலைகளை வைத்து பூஜைகள் நடைபெற்றன. இதன்பின், துர்கா சிலைகளை பார்பதி ஆற்றில் கரைப்பதற்கு எடுத்து சென்றனர். சிலர் ஆற்றில் இறங்கிச் சென்று கரைக்க முயற்சித்தனர். அச்சமயம், ஆற்றில் நீர் பெருக்கெடுத்து வரவே பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதன்பின், மீட்பு படையினர் வந்து விடிய, விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் இறங்கியவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து தேடுதல் பணி நடைபெறுகிறது.

You'r reading துர்கா சிலை கரைக்கச் சென்ற 10 பேர் ஆற்றில் மூழ்கி பலி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நீங்கள் என்ன பாகிஸ்தானியா? பாஜக பெண் வேட்பாளர் அதிரடி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்