ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் வரவேற்கிறது..

congress said it is in favour of the construction of Ram Temple

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம். ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் ஆதரவாக உள்ளது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கும் உத்தரவிட்டு சுப்ரீம் ேகார்ட் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியாகியுள்ளது. நாங்கள் ராமர் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறோம். இந்த தீர்ப்பின் மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான கதவுகள் திறக்கப்பட்டு விட்டன. அதே சமயம், இந்தப் பிரச்னையை வைத்து இவ்வளவு நாளாக அரசியல் செய்து வரும் பாஜகவுக்கும், மற்றவர்களுக்கும் அதற்கான கதவுகள் மூடப்பட்டு விட்டன என்றார்.

You'r reading ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் வரவேற்கிறது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அயோத்தி வழக்கு தீர்ப்பு.. சீராய்வு மனு தாக்கல்.. முஸ்லிம் அமைப்பு தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்