கல்யாணம் நடக்குது.. ரயில் நிரம்பி வழியுது.. பொருளாதாரம் சூப்பர்..

Economy fine, people getting married, airports full: Union Minister Suresh Angadi

யாரும் கல்யாணத்தை நிறுத்தலே.. ரயில்கள் நிரம்பி வழியுது.. அப்பறம் என்ன? பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கிறது என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

அவர், மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்கடி. உத்தரப்பிரதேசத்தில் துண்ட்லா-குர்ஜா சரக்கு ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகளை நேற்று(நவ.15) பார்வையிட்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நாட்டின் பொருளாதார நிலை மோசமாகி இருக்கிறதே? என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், கல்யாணங்கள் நடக்குது... யாரும் கல்யாணத்தை நிறுத்தலே... ரயில்கள் நிரம்பி வழியுது... விமானநிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.. அதையெல்லாம் பார்த்தாலே தெரியவில்லையா? பொருளாதாரம் சூப்பராக இருக்கிறது என்று பதிலளித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், சாதாரண மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

பிரதமரின் பெயரை கெடுக்க வேண்டுமென்பதற்காக சிலர்தான், பொருளாதார சரிவு என்று சொல்கிறார்கள். காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள்தான், நாடாளுமன்றத்தில் பிரச்னையை கிளப்ப காரணம் தேடுகிறார்கள் என்றார்.

நாட்டின் உள்நாட்டு உற்பத்தி விகிதம்(ஜி.டி.பி) 5.6 சதவீதமாக குறையும் என்றும், 8 காலாண்டுகளில் இல்லாத சரிவு இது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், அமைச்சரின் பேச்சு செய்தியாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

You'r reading கல்யாணம் நடக்குது.. ரயில் நிரம்பி வழியுது.. பொருளாதாரம் சூப்பர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பள்ளி மாணவர்களிடம் கூல் லிப் போதை பை.. ராமதாஸ் அதிர்ச்சி தகவல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்