அனைத்து விஷயங்களிலும் வெளிப்படையான விவாதம்.. பிரதமர் மோடி உறுதி..

Prime Minister said that he want frank discussions on all matter in Parliament

நாடாளுமன்றத்தில் அனைத்து விஷயங்களிலும் வெளிப்படையான விவாதங்கள் நடைபெற விரும்புகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் அனைத்து விஷயங்களிலும் வெளிப்படையான விவாதங்கள் நடைபெறவே விரும்புகிறோம். அவையில் தரமான விவாதங்கள், பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டியது முக்கியம். ஒவ்வொரு உறுப்பினரும் விவாதத்தை சிறப்பாக நடத்த வேண்டும்.

இவ்வாறு மோடி கூறினார்.

You'r reading அனைத்து விஷயங்களிலும் வெளிப்படையான விவாதம்.. பிரதமர் மோடி உறுதி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்