ஜே.என்.யு வன்முறை ரமேஷ் பொக்ரியால் பாஜக கண்டனம்

Bjp Strongly condemn JNU violence

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜே.என்.யு. மாணவர் சங்கத்தினர் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், நேற்று மாலையில் பல்கலைக்கழகத்தின் சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் விடுதிக்குள் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். குறிப்பாக, ஜே.என்.யு. மாணவர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கினர். இதில், மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் உள்பட பலருக்கும் மண்டை உடைந்தது.
இது குறித்து பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைகளை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்காக மாணவர்களை பகடைக்காயாக பயன்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்கள் கல்வி கற்கும் நிறுவனங்களாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில், இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. பல்கலைக்கழகத்திற்குள் வன்முறை நடந்திருப்பது வேதனை அளிக்கிறது. மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் பெருமையை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.

You'r reading ஜே.என்.யு வன்முறை ரமேஷ் பொக்ரியால் பாஜக கண்டனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜே.என்.யூ. விடுதிக்குள் குண்டர்கள் புகுந்து மாணவர்கள் மீது கடும் தாக்குதல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்